மருந்தகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த அதிரடி உத்தரவு
மருந்தகங்களில் 30நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அனைத்து மருந்து கடைகளிலும் நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனபொருட்கள் சட்டம் 1940 மற்றும் 1945 அட்டவணை "X , "H","H1" Drugs" குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்துகடைகளிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் -1973 பிரிவு 133-ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்றிலிருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வின் போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது மேற்கண்ட உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.