நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா
நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2024-01-02 12:40 GMT
நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்து திருவிழா விழா பிப்ரவரியில் துவங்குகிறது. பிப்ரவரி 12ல் திங்கட்கிழமை- திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
பிப்ரவரி 13ல் செவ்வாய்கிழமை காப்பு கட்டுதல் நடக்கிறது.பிப்ரவரி 16 வெள்ளிக்கிழமை அம்மன் மயில் வாகனத்தில் நகர்வலம் வருதல் நடக்கிறது. பிப்ரவரி 20ல் அம்மன் சிம்ம வாகனத்தில் நகர்வலம் வருதல் நடக்கிறது.
பிப்ரவரி 23ல் அம்மன் அன்னவாகனத்தில் நகர் வலம் வருகிறார். பிப்ரவரி 25ல் ஞாயிற்றுக்கிழமை -பக்தர்கள் பால்குடமும், பிப்ரவரி 26ல் திங்கள்கிழமை அம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை சாற்றுதல், அரண்மனை பொங்கல் வைத்தல், பிப்ரவரி 27ல் செவ்வாய்கிழமை பூக்குழி பூ பற்ற வைத்தல், கழகுமரம் ஊன்றுதல், ஏறுதல் மாலையில் பூக்குழி இறங்குதல் நடக்கிறது.