நத்தம் : வர்த்தகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
Update: 2023-12-20 10:38 GMT
வர்த்தகர்கள் சங்க கூட்டம்
நத்தம்நத்தம்நத்தம்வர்த்தகர்கள் சங்க 60வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் சேக்ஒலி தலைமை வகித்தார். செயலாளர் பாரூக் முகமது,பொருளாளர் நாகமாணிக்கம்,சங்க சட்ட ஆலோசகர் சேக் சிக்கந்தர் பாட்ஷா முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் செந்தில்ராஜன் வரவேற்றார். கோவில்பட்டி-பள்ளபட்டி சேதமடைந்த சாலையை சீரமைக்கவும், நத்தத்தில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு பஸ் இயக்கிடவும், தெருநாய் ,குரங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. செயற்குழு உறுப்பினர்கள் ஜெரால்டு ராஜா, அப்பாஸ் ஒலி, அன்புராஜா, டில்லோ டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குனர்கள் லோகநாதன், சுந்தர் கலந்துகொண்டனர்.