தேசிய சாகச விருது : குமரி  கலெக்டர் அறிவிப்பு

மத்திய அரசின் சார்பில் வீர தீர செயல் செய்தவர்களுக்கு வழங்கப்படும் டென்சிங் நார்கே தேசிய சாகச விருதிற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-26 05:01 GMT
கலெக்டர் ஸ்ரீதர்

இந்திய அரசின் சார்பில் தேசிய அளவில் வீர தீர செயல் செய்தவர்களுக்கு ஆண்டு தோறும் டென்சிங் நார்கே  தேசிய சாகச விருது வழங்கப்படுகிறது. இதன்படி 2023 ஆம் ஆண்டு துணிச்சலாக நிலம், நீர், வான் வெளியில் சாகசம் செய்ததற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இந்த சாதனை 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் செய்ததாக இருக்க வேண்டும்.   

இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் மத்திய அரசின் https://awards.gov.in என்ற  இணையதள முகவரியில் ஜூன் 14 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் அதன் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களை புத்தக வடிவில் தயாரித்து மாவட்ட விளையாட்டு அலுவலகம் அண்ணா ஸ்டேடியம் நாகர்கோவில் என்ற முகவரியில் வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.      

மேலும் விவரங்களுக்கு நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அலுவலகத்தை நேரில் அல்லது 04652 - 262060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News