நாமக்கல்லில் தேசிய நுகர்வோர் தின விழா - விழிப்புணர்வு பிரச்சாரம்

நாமக்கல்லில் தேசிய நுகர்வோர் தின விழா - விழிப்புணர்வு பிரச்சாரம்

Update: 2023-12-30 17:40 GMT

நாமக்கல்லில் தேசிய நுகர்வோர் தின விழா - விழிப்புணர்வு பிரச்சாரம்

நாமக்கல்லில் நடைபெற்ற நுகர்வோர் தின விழாவில், தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி தலைவர் வக்கீல் செல்வம், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார். தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டியின், நாமக்கல் நகர கிளை சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில், தேசிய நுகர்வோர் தின விழா, விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

விழாவிற்கு தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி தலைவர் வக்கீல் செல்வம் தலைமை வகித்து பொது மக்களுக்கு தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார். 2019 ஆம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும், பொதுமக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது குறித்தும், பணம் செலுத்தி பொருள் மற்றும் சேவைகளை பெறும் போது, பாதிக்கப்பட்ட நுகர்வோர்கள் எவ்வாறு நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை அணுகி நிவாரணங்களை பெற முடியும் என விளக்கி கூறப்பட்டது. பாதிக்கப்பட்ட நுகர்வோர்கள் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் ரூ 50 லட்சம் வரையிலும், ரூ 50 லட்சம் முதல் 2 கோடி வரை மாநில நுகர்வோர் கோர்ட்டிலும், ரூ 2 கோடிக்கு மேலாக தேசிய நுகர்வோர் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்து, 90 நாட்களுக்குள் இழப்பீடு பெற முடியும் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு கூறப்பட்டது. மத்திய அரசு வக்கீல் மனோகரன், நுகர்வோர் புலனாய்வு கமிட்டி நகர செயலாளர் சாதிக் பாஷா, துணை செயலாளர் சுப்பிரமணி, மாநில பொதுச் செயலாளர் இக்பால், மாநில செயலாளர் ஆறுமுகம், மாவட்ட இணை செயலாளர் முத்தையன், சமூக ஆர்வலர் இளங்கோ உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முடிவில் நகர இணை செயலாளர் சிதம்பரம் நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News