தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தின விழிப்புணர்வு பேரணி
ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தின விழிப்புணர்வு பேரணி
ஞானமணி தொழில்நுட்ப கல்லூரி, இயற்பியல் துறை, நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஞானமணி கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் தி.அரங்கண்ணல், ஞானமணி கல்வி நிறுவனங்களின் தாளாளர் பி.மாலாலீனா, ஞானமணி கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் செல்வி மதுவந்தினி, ஞானமணி கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் பி.பிரேம்குமார், ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் முனைவர் கண்ணன், நாமக்கல் மாவட்ட உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் கே.முரளி மற்றும் புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் வி.கோமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்ட உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் திரு.கே.முரளி அவர்கள் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியானது ஞானமணி கல்வி நிறுவத்திலிருந்து தொடங்கி பாச்சல் கிராமம் வரை நடைபெற்றது. பேரணியின் போது மாணவர்கள் பொது மக்களிடையே ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியை தவிர்க்கவும் மற்றும் மஞ்சள்பை பயன்பாட்டை அதிகரிக்கவும் மஞ்சள்பை கொடுத்து வலியுறுத்தினர். பேரணியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.