தேசிய மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி
ஊத்தங்கரையில் தேசிய மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ஊத்தங்கரையில் தேசிய மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மின்சார துறை மூலம், தேசிய மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சந்திரசேகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். போச்சம்பள்ளி கோட்ட செயற்பொறியாளர் இந்திரா முன்னிலை வகித்தார். ஊத்தங்கரை ரவுண்டானாவில் தொடங்கிய பேரணி பேருந்து நிலைம், அரசமர வீதி, கல்லாவி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வோம், வெளியில் செல்லும் முன் மின்விசிறி, மின்விளக்கு, ஏசி, குளிர்சாதன பெட்டி, ஆகியவற்றை அனைத்து விட்டு செல்ல வேண்டும். மின் சேமிப்பு, மின் பாதுகாப்பு, மழைக்காலங்களில் அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொட வேண்டாம் உள்ளிட்ட வாசகங்களை கூறி, விழிப்புணர்வுவை ஏற்படுத்தினர். இதில், ஊத்தங்கரை உதவி செயற்பொறியாளர் சத்திய நாராயணன், உதவி பொறியாளர்கள் ராமன், கார்மேக கண்ணன்,மோகன் அஸ்மா ஜெபின்,ஊத்தங்கரை உட்கோட்டத்திற்குட்பட்ட அனைத்து பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.