திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் புதிய குடிநீர் திட்ட பணிகள் தொடக்கம்

திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் நாளை ரூ.1120.57 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெறவுள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-02-10 13:46 GMT

மாவட்ட ஆட்சியர் 

திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் இன்று ரூ.1120.57 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்ட பணிகள் தொடக்க விழா கலெக்டர் கிறிஸ்துராஜ் தகவல். திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு ரூ.1120.57 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்ட பணிகள் தொடக்க விழா மற்றும் ரூ.53.48 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு கூடம், ரூ.12.87 கோடி மதிப்பில் புதிய பன்னடுக்கு வாகன நிறுத்தும் இடம் ஆகியவற்றின் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.

Advertisement

இதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமை தாங்குகிறார். இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். (நான்) கலெக்டர் கிறிஸ்துராஜ் வரவேற்பு உரையாற்றுகிறேன். 

அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் திட்ட விளக்க உரையாற்றுகிறார். எம்.பிக்கள் ஆ.ராசா, சுப்பராயன், பி.ஆர் நடராஜன், கணேச மூர்த்தி, செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், அயலக நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவ சேனாதிபதி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். 

மேலும் துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல .பத்மநாபன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். முடிவில் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் நன்றி கூறுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News