கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே முத்தாலப்பொழிவில் அலை வேகமாக வந்ததால் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். திருவனந்தபுரம் முதலப்பொழிவில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். இறந்தவர் அஞ்சுதெங்கு பகுதியைச் சேர்ந்த மைக்கேல் என அடையாளம் காணப்பட்டார். ஐந்து பேரை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளானது. காணாமல் போன இருவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட இருவரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.