ஜவுளி

ஜெயங்கொண்டத்தில் ஜவுளி மற்றும் ரெடிமேட் ஆடைகளை நியாயமான விலையில் இருப்பதாக வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஸ்ரீ கண்ணன் சில்க்ஸ் ஜவுளி நிறுவனத்தை பாராட்டி வருகின்றனர்.;

Update: 2025-09-24 18:40 GMT
அரியலூர், செப்.24- ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் மிக மிக அருகில் இயங்கி வரும் ஸ்ரீ கண்ணன் சில்க்ஸ் ஜவுளி நிறுவனம் தரமான துணிகளை நியாயமான விலையில் விற்பதாக ஜெயங்கொண்டம் பகுதி வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி ஏராளமான ஜவுளி மற்றும் ரெடிமேட் ஆடைகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தின் அடையாளமாக திகழ்ந்து கடந்த 25 ஆண்டு காலமாக சிறப்பாக செயல்பட்டு 25 ஆம் ஆண்டு வெற்றி விழா கண்ட ஸ்ரீகண்ணன் சில்க்ஸில் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று தரமான ஜவுளிகளை சரியான (ஞாயமான) விலையில்  விற்பனை செய்து வாடிக்கையாளர்களையும், பொதுமக்களையும் திருப்திப்படுத்தி வருகின்றனர். மேலும் ஜெயங்கொண்டம் பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் பழைய நகராட்சி அலுவலகம் அருகில் செப்டம்பர் 29-ஆம் தேதி முதல் புதிதாக கே மார்ட் ஜவுளி நிறுவனம் எனும் பெயரில் மலிவான விலையில் தரமான ஜவுளிகளை பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் கே மார்ட் ஜவுளி நிறுவனத்தையும் தொடங்கி தற்பொழுது விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஏராளமான பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்களுக்கு தேவையான ஜவுளி மற்றும் ரெடிமேட் ஆடைகளை ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாங்கி செல்கின்றனர். திறப்பு விழா மற்றும் தீபாவளி பண்டிகைக்காக ரூ 500 முதல் 10 ஆயிரம் வரை ஜவுளி எடுக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அன்னக்கூடை, வாலி, தாவி செட், ஹாட்பாக்ஸ், குக்கர், சில்வர்குக்கர் என இன்னும் ஏராளமான அன்பு பரிசுகளை வாரி வழங்குகி வருகின்றனர். அதேபோல் ஸ்ரீகண்ணன் சில்க்ஸில் ஆடவர், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் தனித்தனி பிரிவில் எண்ணற்ற டிசைன்கள், ஏராளமான கலெக்–ஷன்களில் வண்ண வண்ண ஜவுளி மற்றும் ரெடிமேட்ஸ் ஆடைகள் ஏராளமாக குவித்தும் வைத்துள்ளனர். மேலும் தீபாவளி பண்டிகைக்காக ஏராளமான கலெக்ஷன்களில் வண்ண வண்ண ஜவுளி மற்றும் ரெடிமேடு ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை  பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் கண்டு ரசித்தும் தேவையானவற்றை தேர்வு செய்தும், அழகான பரிசு பொருட்களையும் வாங்கி மகிழ்ந்தும் வருகின்றனர். ஸ்ரீகண்ணன் சில்க்ஸில் 25 ஆம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அன்பு பரிசும் கூடுதலாக   பம்பர் பரிசு அதாவது வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தினம் தினம் குலுக்கல் முறையில்  3 ஆயிரத்துக்கும் மேல் ஜவுளி வாங்கும் வாடிக்கையாளர்களில் ஒருவரை  தேர்வு செய்து அன்பு பரிசாக 32 இன்ச் எல் இ டி டிவி வழங்கப்படுகிறது. மேலும் கூடுதலாக ஸ்ரீகண்ணன் சில்க்ஸில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  500 முதல் 10 ஆயிரம் வரை ஜவுளிகள் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அன்னக்கூடை, வாலி, தாவி செட், ஹாட்பாக்ஸ், குக்கர், சில்வர்குக்கர் என அன்பு பரிசுகள் வழங்கப்படுகிறது மேலும் ஜெயங்கொண்டம் மாநகரில் மருத்துவ பரிசோதனைகளுக்கு வெளியூர் செல்லும் சூழலால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி ஜெயங்கொண்டம் பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் பழைய நகராட்சி அலுவலகம் மற்றும் கே மார்ட் ஜவுளி நிறுவனம் எதிரில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை அறிந்து அனைவரின் உடல்நலம் பேனும் வகையில் ஜெயங்கொண்டம் மாநகரில் முதன் முறையாக இறக்குமதி செய்யப்பட்ட அதி நவீன இயந்திரங்கள் மூலம் துல்லியமான முறையில் பரிசோதனைகள் செய்து 2 முதல் 3 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகளை அல்ட்ரா கேர்  ரத்தப் பரிசோதனை நிலையத்தினர் வழங்கி வருகின்றனர். மேலும் அல்ட்ரா கேர் ரத்தப் பரிசோதனை நிலையத்தில் தைராய்டு பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, விட்டமின் குறைபாடு பரிசோதனை, ரத்தசோகை பரிசோதனை, நோய் எதிர்ப்பு சக்தி பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை, தொற்றுநோய் பரிசோதனை, முடக்குவாத பரிசோதனை, டவுன்ட் சின்ட்ரோம் பரிசோதனை, கருவில் ஏற்படும் குரோமசோம் குறைபாடுகளை கண்டறிதல், டபுள் மார்க் பரிசோதனை மற்றும் முழு உடல் ரத்த பரிசோதனை உள்ளிட்ட அனைத்து பரிசோதனை முடிவுகளும் மிகவும் துல்லியமாக இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில்  வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் சிரமம் குறைந்துள்ளதாகவும், வெளியூர்களுக்கு செல்லாமலேயே உள்ளூரிலேயே அனைத்து வகை பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் அல்ட்ரா கேர் ரத்த பரிசோதனை நிலையம் மூலம் இலவச பரிசோதனைகளும் அவ்வப்போது பொதுமக்களின் நலன் கருதி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலவச கண் சிகிச்சை முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு முகாம்களை நடத்தி பொதுமக்களுக்கு சேவையாற்றி வருவதுடன் பொது சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி ஜெயங்கொண்டம் ஸ்ரீ கண்ணன் சில்க்ஸ் உரிமையாளர் நந்தகுமார் தெரிவிக்கையில்:- கடந்த 25 ஆண்டு காலமாக வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்று அவர்களுக்கு நியாயமான விலையில் தரமான ஜவுளிகளை தந்து திருப்தி அளித்து வருகிறோம். மேலும் தற்பொழுது வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்பு பரிசுகள் உள்ளிட்டவைகளோடு கூடுதலாக பம்பர் பரிசாக 25 ஆம் ஆண்டு வெற்றி விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3000 -க்கு மேல் ஜவுளி வாங்கும் வாடிக்கையாளர்களை தினம் தினம் குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவர்களுக்கு 32 இன்ச் எல் இ டி டிவி ஒன்றை அன்பு பரிசாக கொடுத்து வருகிறோம், அதாவது பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக அவர்களுக்கு ஸ்ரீகண்ணன் சில்க்ஸின் அன்பை வெளிப்படுத்தும் வகையில் அன்பு பரிசுகளை வாரி வழங்குகிறோம் எனவும், அதுமட்டுமில்லாமல் தற்பொழுது பொது சேவைகளிலும் ஈடுபட்டு வருவதோடு, பொதுமக்கள், நோயாளிகளின் நலன் கருதி அல்ட்ரா கேர் ரத்த பரிசோதனை நிலையத்தை தொடங்கி இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகளை வழங்கி பொதுமக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறோம். மேலும் பல பொதுசேவைகளும், கண் பரிசோதனை முகாம், கண் அறுவை சிகிச்சை முகாம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ முகாம்களும் நடத்தி வருவதாகவும், மேலும் நமது ஸ்ரீ கண்ணன் சில்க்ஸ் மற்றும் கே  மார்ட் ஜவுளி நிறுவனத்திற்கு தீபாவளி பண்டிகைக்கு ஜவுளி மற்றும் ரெடிமேட் ஆடைகள் வாங்க அனைவரும் குடும்பத்தோடு வந்து ஜவுளி மற்றும் ரெடிமேட் ஆடைகளோடு அன்பு பரிசு மற்றும் பம்பர் பரிசினையும் வாங்கி செல்ல அன்போடு நாங்கள் குடும்பத்தோடு வரவேற்கின்றோம் என்று அவர் தெரிவித்தார்.

Similar News