வாக்குப்பெட்டி, இதர படிவங்கள் இருப்பு குறித்து ஆய்வு!
வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டி, இதர படிவங்கள் இருப்பு குறித்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் திலகவதி ஆய்வு செய்தார்.
Update: 2024-05-28 08:18 GMT
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டி மற்றும் இதர படிவங்கள் இருப்பில் உள்ள விவரங்கள் குறித்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர் திலகவதி ஆய்வு செய்து வருகிறார். முதல் கட்டமாக குடியாத்தம் மற்றும் கே.வி.குப்பம் ஆகிய ஒன்றியங்களில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து கணியம்பாடியிலும், பின்னர் மற்ற ஊராட்சி ஒன்றியங்களிலும் ஆய்வு செய்தனர்.