திருவாரூரில் ஆட்சி மொழி பயிலரங்க கருத்தரங்கம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற ஆட்சிமொழி பயில்ரங்கில் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.;
Update: 2024-02-17 10:13 GMT
ஆட்சி மொழி பயிலரங்கம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சி மொழி பயிலரங்க கருத்தரங்கம் பிப்ரவரி 15 மற்றும் பிப்ரவரி 16ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றன . தொழிலாளர் உதவி ஆய்வாளர் ராதிகா, இ வர்த்தக சங்க ஒருங்கிணைப்பாளர் ஆரூர் செ.அறிவு மற்றும் இலக்கிய வளர்ச்சிக் கழக நெறியாளர் தனிக்கோடி ஆகியோர் கருத்துறை ஆற்றினர்.
பின்னர் ஆட்சி மொழி கருத்தரங்கில் 2021 ஆம் ஆட்சி மொழித் திட்ட செயலாளர்கள் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலகமான திருவாரூர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு கேடயம் வழங்கப்பட்டது.