பாட்டிலால் குத்தி முதியவர் கொலை - வாலிபர் கைது
தக்கலை பேருந்து நிலையத்தில் முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான வாலிபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
குமரி மாவட்டம், இரணியல் அருகே உள்ள கண்டன்விளையை சேர்ந்தவர் விஜயபானு.தக்கலை பஸ்நிலைய பகுதியில் யாசகம் பெற்று வந்த அவர், சம்பவத்தன்று பஸ் நிலையத்தில் பிணமாக கிடந்தார்.தக்கலை போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார், கொலையாளி யார்,என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை - நடத்தினர்.
அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவு களை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, பஸ் நிலையத்தில் நின்ற ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் யார் என விசா ரித்ததில் எட்டணி பகுதியை சார்ந்த விஜி என தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தபோது, விஜயபானுவை கொலை செய்ததை ஒத்துக் கொண்டார்.
சம்பவத்தன்று தான் மது போதையில் பஸ் நிலையம் வந்த போது விஜயபானு வாக்குவாதம் செய்ததால் எனக்கு ஆத்தி ரம் ஏற்பட்டது. இதனால் அங்கு கிடந்த சோடா பாட்டிலை. உடைத்து விஜயபானு வயிற்றில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன் என போலீசாரிடம் விஜி தெரிவித்தார்.இதனை தொடர்ந்து போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விஜியை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.