கல்லல் அருகே பைக் மோதி ஒருவர் படுகாயம்
கல்லல் அருகே இருசக்கர வாகனம் மோதி ஒருவர் படுகாயம் அடைந்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-04 10:00 GMT
அரசு மருத்துவமனை
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே உள்ள கல்லல் ரோடு பகுதியில் தச்சன் புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் சுரேஷ் வயது (40). இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திருமயம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் மகன் ஹரிஷ் குமார் வயது (21) என்பவர் அவரது இரு சக்கர வாகனத்தை அதிவேகமாக ஒட்டி வந்து அவர் மீது மோதியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இச்சம்பவம் குறித்து மதகுபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்