குப்பையில் கிடந்த பொருள் தீப்பிடித்து இருந்ததில் ஒருவர் தீக்காயம் !
ராமலிங்கபுரத்தில் குப்பையில் கிடந்த பொருள் தீப்பிடித்து இருந்ததில் ஒருவருக்கு தீக்காயம் ஏற்ப்பட்டது.
By : King 24x7 Angel
Update: 2024-03-12 11:47 GMT
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா திருத்தங்கள் பகுதியை சார்ந்தவர் வனராஜா வயது 25 இவர் தனியார் பட்டாசு ஆலையில் வேலை செய்து வருவதாகவும், இவர் வேலையை முடித்துவிட்டு தனது நண்பரான தருண் என்பவரை அழைத்துக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் ராமலிங்கபுரத்திலிருந்து வெங்கல்நாயக்கன்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது இயற்கை உபாதையை கழிப்பதற்காக வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றபோது அங்கு குப்பையில் புகை வந்து கொண்டிருந்ததாகவும் திடீரென அந்த இடத்தில் தீப்பிடித்து எரிந்து ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக வனராஜா என்பவருக்கு தீக்காயம் ஏற்பட்டதாகவும் இதை அடுத்து வனராஜா விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அளித்த புகார் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.