சமூக சேகவகர் உறுப்புகள் தானம் - விஜய் வசந்த் எம்.பி அஞ்சலி
சமூக சேகவர் உறுப்புகள் தானம் - விஜய் வசந்த் எம்.பி அஞ்சலி
By : King 24x7 Website
Update: 2023-11-27 03:45 GMT
குமரி மாவட்டம் புதுக்கடைகீழ்குளம் அருகே உள்ள சரல்விளையை சேர்ந்தவர் செல்வின் சேகர் (வயது 36). இவர் மருத்துவம் சார்ந்த முதுநிலை பட்டப்படிப்பு படித்துள்ளார். கருங்கல், புத்தன் துறை ஆகிய பகுதிகளில் மருந்தகம் வைத்து நடத்தி வந்தார். செல்வின் சேகர் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார். இப்படி எண்ணற்ற உதவிகளை செய்து வந்த செல்வின் சேகர் நோயால் பாதிக்கப்பட்டு, மூளைச்சாவு ஏற்பட்டது. அவருடைய இதயம், நுரையீரல் உள்ளிட்ட 6 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. உடல் உறுப்புகள் தானம் செய்த செல்வின் சேகர் உடலுக்கு விஜய்வசந்த் எம்.பி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:- இத்தகைய தருணத்தில் இந்த முடிவினை எடுத்த செல்வின் சேகர் மனைவி மற்றும் குடும்பத்தினர் பாராட்டப்பட வேண்டியவர்கள். தான் இறக்கும் போது 6 பேரை வாழ வைத்த செல்வின் சேகரின் பெருமை பேசப்படும். இவ்வாறு அவர் கூறினார்.