பல்லடம் தனியார் தொலைக்காட்சி நிருபருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க கோரிக்கை

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடந்த சம்பவத்தை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2024-01-31 11:32 GMT

கண்டன ஆர்ப்பாட்டம்

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடந்த சம்பவத்தை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது/இதில் 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதி தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு மீது நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரி தாக்குதல் நடத்தி தற்போது கோவை கங்கா மருத்துவமனையில் நேசபிரபு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் அனைத்து கட்சியினர் கண்டன அறிக்கை தெரிவித்தும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள செய்தியாளர்கள் காவல்துறையினரைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட தலைநகர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் , உத்திரமேரூர் பகுதிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட அச்சு மற்றும் காட்சி ஊடக செய்தியாளர்கள் கலந்து கொண்டு காவல்துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் பாதிக்கப்பட்ட செய்தியாளர் நேசபிரபுவுக்கு சிகிச்சை மற்றும் குடும்ப செலவுக்கு தமிழக அரசின் சார்பில் 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். மேலும் அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கையும் விடப்பட்டது.
Tags:    

Similar News