நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் ரூ.28 லட்சத்தில் பூங்கா
By : King 24X7 News (B)
Update: 2023-11-20 14:16 GMT
கூடுவாஞ்சேரியில் ரூ.28 லட்சத்தில் பூங்கா
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு கே.ஜே.நகரில் கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பில் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நகராட்சி ஆணையர் தாமோதரன் தலைமை தாங்கினார் துணைத் தலைவர் வழக்கறிஞர் ஜி.கே.லோகநாதன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர் மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் நகராட்சி பொறியாளர் வெங்கடேசன், திட்ட இயக்குனர் பாஸ்கரன், மேலும் எம்.கே.டி.சரவணன் 9-வது வார்டு தி.மு.க. வட்ட செயலாளர் ஜினோ, அவைத்தலைவர் கணேசன், இளைஞரணி நிர்வாகிகள் பிரபு, ரவி பங்கேற்றனர்.