நடந்து சென்றவர் மீது பைக் மோதி சம்பவ இடத்தில் உயிரிழப்பு
கரூர் அருகே நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.;
காவல் நிலையம்
கும்பகோணம் அருகே நீரத்தநல்லூர், மொளத்துகுறிச்சி, கிழக்கு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் பன்னீர்செல்வம் வயது 54. இவர் சமீபகாலமாக கரூரில் வசித்து வந்தார். இதனிடையே பிப்ரவரி 28ஆம் தேதி மாலை 7: 10 மணியளவில், கருப்பம்பாளையத்திலிருந்து சுக்காரியூர் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அதே சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத டூவீலர் ஒன்று, நடந்து சென்று கொண்டிருந்த பன்னீர்செல்வம் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அதேசமயம், மோதிய வாகனம் நிற்காமல் மின்னல் வேகத்தில் வேகமாக சென்று விட்டது. இந்த சம்பவம் அறிந்த பன்னீர் செல்வத்தின் நண்பர் வெங்கடாசலம் வயது 53 என்பவர்,
இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த பன்னீர் செல்வத்தின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து,இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.