கொண்டலாம்பட்டி அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

கொண்டலாம்பட்டி அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2024-01-05 11:43 GMT

சாலைமறியலில் ஈடுபட்ட மக்கள் 

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள சிவதாபுரம் மலங்காட்டான் தெருவில் கடந்த 4 மாதங்களாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது அந்த பகுதிக்கு செல்லும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த பகுதிக்கு குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து மலங்காட்டான் தெருவை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

Advertisement

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சீராக குடிநீர் வழங்க கோரி சிவதாபுரம் பகுதியில் காலிக்குடங்களுடன் சாலைமறிலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீராக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலைமறியலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News