பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் பெற குவிந்த மக்கள்

பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் பெற ஆவரங்காடு பகுதியில் பெண்கள் பொதுமக்கள் குவிந்தனர்

Update: 2024-01-08 06:58 GMT

பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் பெற ஆவரங்காடு பகுதியில் பெண்கள் பொதுமக்கள் குவிந்தனர்

தமிழக அரசு தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க உள்ளது.. அதில் பச்சரிசி, சர்க்கரை , ஒரு முழு நீள கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது.. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வீடு வீடாக வழங்கப்படும் என அறிவிப்பை சனிக்கிழமை அன்று இரவு தமிழக அரசு வெளியிட்டு இருந்தது.இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஐந்து ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்களைப் பெற ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரேஷன் கடைகள் திறப்பதற்கு முன்பே குவிந்ததனர்.இவர்களுடன் மாதாந்திர ரேஷன் பொருட்கள் வாங்க வந்தவர்களும் திரண்டதால், கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது . இதனை அடுத்து ரேஷன் கடை ஊழியர்கள்,பொதுமக்களை சமரசப்படுத்தி, குடும்ப அட்டைதாரர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு, தனித்தனியே பிரிந்து சென்று டோக்கன்களை வழங்கினர்.இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறும் பொழுது,தமிழக அரசு வீடு வீடாக சென்று நேரடியாக குடும்ப அட்டைதாரர்களை சந்தித்து டோக்கன் வழங்க வேண்டும் என கூறியிருந்தது. அதன்படி டோக்கன்களை வழங்க திட்டமிட்டு இருந்தோம்.. ஆனால் எங்களுக்கு முன்பாக குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாதாந்திர ரேஷன் பொருட்கள் வாங்க வந்தவர்கள் ரேஷன் கடைகள் முன்பு குவிந்ததால் அவர்களுக்கு முறையாக டோக்கன் வழங்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவித்தனர்.. ஏற்பட்டதாக தெரிவித்தனர் ..
Tags:    

Similar News