எலி மருந்து சாப்பிட்ட நபர் பலி
திருவண்ணாமலை அருகே எலி மருந்து சாப்பிட்ட நபர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-26 09:38 GMT
பலி
திருவண்ணாமலை மாவட்டம், ஆர்ப்பாக்கம் அரச மர தெருவை சேர்ந்தவர் கேசவன். கடந்த 2 நாட்களுக்கு முன்பு எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவண்ணாமலை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.