அரசு நிலங்களை மீட்டு தர கோரி விவசாயிகள் மனு

பாடலூர் அருகே உள்ள தெரணி கிராமத்தில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் தனியார் நிறுவனம் அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அதனை மீட்டுத் தர வலியுறுத்தியும் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

Update: 2024-05-28 08:06 GMT

பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் அருகே உள்ள தெரணி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலர்களை சந்தித்து மனு அளித்தனர் அதனை தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில் . தங்கள் கிராமத்தில் தனியார் நிறுவனம் சூரிய ஒளியில் மின்சார உற்பத்தி செய்யும் நிறுவனத்தை தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம் கிராமத்தில் உள்ள பொது இடங்களையும், ஏரி, குளம் குட்டைகளையும், ஏரிகளுக்கு செல்லும் வரத்து வாய்க்கால்களையும், ஆக்கிரமித்துள்ளதோடு புறம்போக்கு நிலங்கள், வண்டி பாதை உள்ளிட்ட அவற்றையும் ஆக்கிரமித்துள்ளது.

இவ்வாறு 30 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்து நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரிக்கு வரும் வரத்து வாய்க்கால்களும் மறிக்கப்பட்டு விட்டது. இதனால் ஏரியை நம்பி விவசாயம் செய்து வந்த சுமார் 500 ஏக்கர் விளை நிலம் பாதிக்கப்பட்டுள்ளதோடு கிராமத்தில் ஏழை தொழிலாளிகள் வளர்த்து வரும் கால்நடைகளும் பாதிக்கப்பட்டு அவைகள் நீர் அருந்த வழிவகை இல்லாமல் போய்விட்டது.இது மட்டுமின்றி அரசுக்கு சொந்தமான மைன்ஸ் இடம் சுமார் 10 ஏக்கரும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்டு பொது பயன்பாட்டிற்கு விடுவதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு முன்பு ஆலத்தூர் வட்டாட்சியிடம் கொடுக்கப்பட்ட மனு மீது, விசாரணை நடத்தி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யாமலேயே ஆக்கிரமிப்புகள் ஏதுமில்லை என்று வட்டாட்சியர் பதில் அளித்துள்ளது தங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்ற அலுவலர்கள் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News