ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு
ராமநாதபுரம் மாவட்டம்,குணவதிமங்கலத்தில் உப்புநீர் சுத்திகரித்து குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்தால் நீர்நிலைகள் பாதிகப்பட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகா, குணவதிமங்களம் கிராமத்தில் உப்புநீரை சுத்திகரித்து குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் இயங்குகிறது. இதில் சுத்திகரிக்கபட்ட பின் வரும் வேதிபொருள் கலந்த உப்புநீர் கழிவுநீர் அந்த பகுதியில் உள்ள வயல்கள் குளங்களில் கலப்பதால் நிலத்தடி நீரும் பாதிக்கின்றன அதை பருகும் ஆடு மாடுகள் உயிரிழந்து வருவதாகவும் கிராம பொதுமக்கள் சார்பாக ஏற்கெனவே மனு கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில், தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதி மக்கள் குடிநீர் ஆதாரமாக விளங்கும் குளங்களையும் விவசாய பகுதிகளையும் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர். இதில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் நிர்வாகி செந்தில் குமார் தொழிலாளர் அணி காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.