இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு
தர்மபுரி மாவட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு வெண்ணாம்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.;
Update: 2024-02-07 06:29 GMT
உடல் தகுதி தேர்வு
தர்மபுரி மாவட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வானது வெண்ணாம்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த எழுத்து தேர்வு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 695 பேருக்கு உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. அதில் முதற்கட்டமாக 400 நபர்களுக்கு நேற்று உயரம் , மார்பளவு மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நிகழ்வு நடைபெற்றது. இதில் சேலம் சரக டிஐஜி உமா மேற்பார்வையில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமையில் நடைபெறுகிறது இதில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், சுவேதா மற்றும் காவல் ஆய்வாளர்கள் காவல் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.