இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு
சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடந்த 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வை மாநகர் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி ஆய்வு செய்தார்.;
Update: 2024-02-07 07:32 GMT
உடற்தகுதி தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் தமிழகம் முழுவதும் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. தொடர்ந்து இன்று காலை அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு தொடங்கியது. இதில் சேலம் மாவட்டத்தில் குமாரசாமி ஆயுதப்படை மைதானத்தில் உடற்தகுதி தேர்வு தொடங்கியது. இந்த தேர்வில் பங்கேற்க சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 822 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதில் 420 பேர் நேற்று குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற உடல் தகுதி தேர்வில் பங்கேற்றனர் . முதலில் தேர்வர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. அதன் பிறகு உயரம் சரிபார்ப்பு நடைபெற்றது. பின்னர் அவர்களுக்கு 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம், நடத்தப்பட்டன. வருகிற 9-ந் தேதி வரை இந்த உடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது. இதனை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.