85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க பைலட் பேப்பர் அச்சிடும் பணி நிறைவு

கிருஷ்ணகிரியில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்கு சாவடி செல்லாமலேயே வாக்களிக்கும் வகையில் பைலட் பேப்பர் அச்சடிக்கும் பணிகள் நிறைவடைந்தன.

Update: 2024-04-04 05:14 GMT

 கிருஷ்ணகிரியில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்கு சாவடி செல்லாமலேயே வாக்களிக்கும் வகையில் பைலட் பேப்பர் அச்சடிக்கும் பணிகள் நிறைவடைந்தன.  

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்குசாவடி மையங்களுக்கு சென்று வாக்களிக்க முடியாதவர்களுக்கு அவர்கள் இருப்படத்திலேயே இருந்து வாக்களிக்கும் பைலட் பேப்பர் அச்சடிக்கும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகரியுமான  சரயு முன்னிலையில் சுப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்புடன் ஆட்சியர் அலுவலகம் கொண்டு வரப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையம் இந்த மக்களவைத் தேர்தலில் 85 வயதிற்கும் மேற்பட்டவர்கள், மாற்றுத்திரனாளிகள் வாக்குசாவடி மையங்களுக்கு சென்று வாக்களிக்க முடியாதவர்களுக்கு வீட்டில் இருந்தப்படி வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இதன்படி கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, தளி, ஓசூர், வேப்பனஹள்ளி, பர்கூர் ஊத்தங்கரை ஆகிய ஆறு சட்டமன்றத் தொதிகளுக்கு உட்பட்ட பகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட 14 ஆயிரத்து 787 வாக்காளர்களுக்கும், வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்ல முடியாத 14 ஆயிரத்து 440 மாற்று திறனாளிகளும் உள்ளனர்

. இவர்கள் வீட்டில் இருந்தப்படியே வாக்களிக்கும் பைலட்பேப்பர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியர் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு அதற்கான பணிகளும் நிறைவடைந்ததை அடுத்து இதனை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகரியுமான சரயு நேரில் சென்று பார்வையிட்டார், பின்னர் அச்சடிக்கப்பட்ட பைலட் பேப்பர்கள் இரண்டு இரும்பு பெட்டிகளில் அடைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலிப் பாதுகாப்புடன் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக பூட்டி சீல் வைக்கப்பட்டது. அப்போது வட்டாச்சியர் மற்றும் வேட்பாளர்களும் உடன் இருந்தனர்கள்.

Tags:    

Similar News