பிரதமர் மோடி வருகை - கருப்பு பலூன் போராட்டம்
குலசேகரம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பலூன் பறக்க விட்டு போராட்டம் நடத்தப்படும் காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர்.;
Update: 2024-02-28 03:53 GMT
மணிகண்டன்
திண்டுக்கல் மாநகர, மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் மணிகண்டன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, குலசேகரத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பலூன் பறக்க விட்டு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். இதற்காக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள நகர தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.