நாகை : கஞ்சா விற்பனை - காவல்துறை அதிரடி நடவடிக்கை
நாகையில் கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்து அவர்களிடம் இருந்து 5 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிறு உத்தரவின் பெயரில் கஞ்சா கள்ள சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக உதவி ஆய் வாளர் பாலமுருகன் தலைமையிலான தனி படை காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் .
வெளிப்பாளையம் காவல் நிலைய சரகத்திற்கும் உட்பட்ட கல்யாண் தோட்டம் பகுதியில் கஞ்சா விற்பனை குற்றத்தில் ஈடுபட்ட நல்லியாண் தோட்டம் தெற்கு தெருவை சேர்ந்த சத்தியவாணி. மகாலட்சுமி நகர், சுகுணா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 4 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் நாகையில் நடைபெற்ற சோதனையில் நாகை கோட்டை வாசல் படி அருகில் சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா கடத்தல் ஈடுபட்ட நாகை வெளிப்பாளையம் பச்சை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த ரேவதி. நாகை மருந்து கொத்தனார் தெருவை சேர்ந்த ரிக்கிபாண்டி, திருவாரூரைச் சேர்ந்த ரமணா ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ 500 கிராம் கஞ்சாவை கைப்பற்றினார்கள்.
அதே போல் நாகை வெளிப்பாளையம்காவல் சரகத்திற்கு உட்பட்டநாகை கோட்டைவாசல் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட ஈஸ்வரியைகைது செய்த போலீசார் 90 மில்லி மது பாட்டில்கள் 190 ம் 180 மில்லி மது பாட்டில் 48-ம் 25 லிட்டர் பாண்டி சாராயம் கைப்பற்றப்பட்டது.