ராயபுரம் பகுதியில் பெண் காவலர் குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை
ராயபுரத்தில் பெண் காவலர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை, கணவனும் காவலராக பணிபுரிந்து வரும் நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை.;
Update: 2024-06-01 05:28 GMT
தற்கொலை
சென்னை ராயபுரம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் காவலர் சேகர் இவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவலர் பிரியங்கா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராயபுரம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி அரசு ஸ்டாலின் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர், பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கணவன் சேகரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது,