தோடர் பழங்குடியின பெண்கள் பொங்கல் விழா
தோடர் பழங்குடியின பெண்கள் பொங்கல் வைத்து ஆடிய கலாச்சார நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Update: 2024-01-17 15:48 GMT
காணும் பொங்கலை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தமிழக சுற்றுலா துறை சார்பாக பொங்கல் விழா நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சி தலைவர் அருணா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தோடர் இன பழங்குயின பெண்கள் உள்பட ஏராளமான பெண்கள் மண் பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
அதனை தொடர்ந்து தோடர் இன பெண்கள் தங்களது பாரம்பரிய உடைகளுடன் வட்டமாக நின்று பொங்கல் விழா குறித்து தங்களது மொழியில் பாடியவாறு நடனமாடினர். அதனை சுற்றி நின்று இருந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.