ஜன 10 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு
ஜன 10 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு;
By : King 24x7 Website
Update: 2024-01-09 07:01 GMT
ஜன 10 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழ்நாடு அரசு தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஒருகிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் வழங்க ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் ஜனவரி 10 ஆம் தேதி முதல் 2 லட்சத்தி 23 ஆயிரத்தி 618 அரிசி பெறும் குடும்ப அட்டைதார்களுக்கு, 466 நியாயவிலை கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கபட உள்ளதாகவும், மேலும் தங்களுக்கு கொடுக்கபட்ட டோக்கன்களில் தெரிவிக்கபட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே பொங்கல் பரிசினை ரேஷன் கடைகளுக்கு சென்று பெற்று கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.