செல்வவிநாயகர் கோயிலில் பொங்கல் வழிபாடு!
பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் கண்டியாநத்தம் செல்வவிநாயகர் கோயிலில் பொங்கல் வழிபாடு இன்று நடைபெற்றது.
Update: 2024-05-25 06:39 GMT
பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் கண்டியாநத்தம் செல்வவிநாயகர் கோயிலில் பொங்கல் வழிபாடு இன்று நடைபெற்றது.கேசராபட்டி ஊர்பொதுமக்கள் சார்பில் அங்குள்ள ஸ்ரீபிடாரி அம்மன் கோயிலில் பொங்கல் கூடைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து இந்த பொங்கல் விழாவில் ஏராளமான பெண்கள் தலையில் பொங்கல் கூடை சுமந்து கால்நடையாக சென்று கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.