குமாரபாளையத்தில் வரும் 12ம் தேதி மின்தடை

குமாரபாளையத்தில் வரும் 12ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது

Update: 2023-12-09 12:52 GMT

குமாரபாளையத்தில் வரும் 12ம் தேதி மின்தடை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமாரபாளையத்தில் டிச. 12ல் மாதாந்திர பராமரிப்பு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இது குறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் டிச. 12ல் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக, குமாரபாளையம் நகரம், கோட்டைமேடு, மேட்டுக்கடை, கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி, சத்யா நகர், வேமன் காட்டுவலசு,கோட்டைமேடு, சாமியம்பாளையம், டி.வி.நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, கல்லங்காட்டுவலசு மற்றும் வளையக்காரனூர்,கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Tags:    

Similar News