வளவனூர், செஞ்சியில் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
வளவனூர் பசுபதீஸ்வரர் கோவில் மற்றும் செஞ்சி காசி விஸ்வநாதர் கோவில்களில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
நந்தி பகவான்
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே பஞ்ச மாதேவி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதை யொட்டி மூலவர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் மற்றும் நந்தீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்கா ரத்தில் பசுபதீஸ்வரர், நந்திகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பஞ்சமாதேவி கிராம பொதுமக்கள் செய்தி ருந்தனர்.
செஞ்சி சந்தைமேடு பகுதியில் உள்ள விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி மாலையில் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்மன் நந்தி பகவான் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் மற்றும் அருணாசலேஸ்வரர் ஆகிய கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.