பிரதமர் வருகை - கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் பாதுகாப்பு ஒத்திகை

பிரதமர் வருகையை ஒட்டி 3 அடுக்கு பாதுகாப்புடன் ஹெலிப்பேடு தரம் குறித்து ஆய்வு ஒத்திகை நடத்தப்பட்டது.

Update: 2024-03-14 06:36 GMT

ஹெலிகாப்டர் பாதுகாப்பு ஒத்திகை

கன்னியாகுமரிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை வருகிறார். ஆஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதில் கூட்டணி கட்சி தலைவர்கள், பாரதிய ஜனதா முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். நாளை காலை 11 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகிறார். இதற்காக கன்னியாகுமரி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகை  வளாகத்தில் அமைந்துள்ள ஹெலிப்பேட்டில் ராணுவ ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி வந்து இறங்குகிறார்.

அங்கு இருந்து கார் மூலம் விழா மைதானத்திற்கு வருகிறார். இதை அடுத்து ஹெலிப்பேடு தரம் குறித்து ஆய்வு நேற்று ஒத்திகை நடத்தப்பட்டது. பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரி உட்பட , மற்றும் அதிகாரிகளும் நேற்று காலை முதலே ராணுவ ஹெலிகாப்டர் இறங்கி அதன் தரத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.        பிரதமர் வருகைக்கு மொத்தம் மூன்று அடுக்கு பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது. 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கடந்த இரு நாட்களாக தீவிர சோதனைகள் நடக்கிறது. யார் யார் லாட்ஜூ களில்  தங்கி உள்ளனர், அவர்கள் பெயர் முகவரி சேரிக்கப்படுகிறது. புதிதாக யார் வந்தாலும் உடனடியாக தகவல்கள் தெரிவிக்க வேண்டும் என்று லாட்ஜ் மற்றும் மேலாளர்களை போலீசார் அறிவித்துள்ளனர். மேலும்  தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News