போக்குவரத்து காவலர்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி
திருவாரூரில் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.;
Update: 2024-03-11 12:15 GMT
நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி
தற்போது கோடை வெயில் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு எஸ்பி ஜெயக்குமார் நீர் மோர் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார்.
அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு தினசரி நீர் மோர் அல்லது குளிர்பானம் வழங்க வேண்டும் என எஸ்பி அறிவுறுத்தினார்.