மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
தென்காசி மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Update: 2024-05-27 05:51 GMT
தென்காசி மாவட்டத்தில் மின்வாரியம் சார்பில் மாதம் ஒரு நாள் மின் தடை செய்யப்பட்டு நாள் முழுவதும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகளை முன்னிட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் ஆங்காங்கே அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது .எனவே விரைவில் மின் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.