தீயணைப்பு துறையினரால் பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு
தீயணைப்பு துறையினர் மலைப்பாம்பை பிடித்தனர்.
By : King 24X7 News (B)
Update: 2023-12-13 14:43 GMT
நத்தம் அருகே மூங்கில்பட்டியில் கண்மாய் கரையில் இருந்த மலைப்பாம்பு தீயணைப்பு துறையினரால் லாபகமாக பிடிக்கபட்டது. தொடர்ந்து மலைப்பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் தொடர்ந்து மலை பாம்புகள் பிடிபட்டு வருகின்றன. கரந்தமலை மற்றும் நத்தம் மலைப்பகுதியில் இருந்து மலை நேரங்களில் அடித்து வரப்படும் மலைப்பாம்புகள் நத்தம் பகுதியில் தொடர்ந்து உலா வருகின்றன. இதைக் கண்டு பீதி அடையும் போது மக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தொடர்ந்து தகவல் கொடுத்து வருகின்றனர்.
இதனால் தீயணைப்புத் துறைகளுக்கு தொடர்ந்து பாம்பு பிடிப்பது வேலையாக மாறிவிட்டது. பின்பு பாம்பை மலைப்பகுதி கொண்டு விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.