ரகூத்தமர் சுவாமிகளின் 451வது ஆராதனை விழா
கள்ளகுறிச்சி மாவட்டம், மணம்பூண்டியில் நடைபெற்ற ரகூத்தமர் சுவாமிகளின் 451வது ஆராதனை விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-01-21 05:14 GMT
ரகூத்தமர் சுவாமிகள் 451 வது ஆராதனை விழா
மணம்பூண்டி, ரகூத்தமர் சுவாமிகளின் 451வது ஆராதனை விழாவில் அதிர்ஷ்டானத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. பாவபோதகர் என போற்றப்பட்ட உத்திராதி மடத்தில் பீடாதிபதி ரகூத்தமர் சுவாமிகளின் மூல பிருந்தாவனம் மணம்பூண்டியில் அமைந்துள்ளது. இவரது 451வது ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு, விழாவின் முதல் நாளான நேற்று காலை 5:00 மணிக்கு பிருந்தாவனத்திற்கு நிர்மால்ய அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 11:00 மணிக்கு உத்திராதி மடத்தின் குருஜி ஸ்ரீ சத்யார்த்தம தீர்த்த சுவாமிகள் தலைமையில் அதிர்ஷ்டானத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம், பூஜை நடந்தது. மாலை 6:00 மணிக்கு வெள்ளி ரதத்தில் ரகூத்தமர் எழுந்தருளி அதிர்ஷ்டான வளாகத்தில் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.