பாஜக அரசின் சாதனையை விளக்கிக் கூறி ராம.சீனிவாசன் வாக்கு சேகரிப்பு

மோடி அரசின் 10 ஆண்டு கால சாதனைகளை விளக்கி கூறி விருதுநகர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2024-04-07 07:13 GMT

தேர்தல் பிரசாரம்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல்அனல் பறக்கும் சூறாவளி பிரச்சாரத்தில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கட்சியின் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் , மதுரை தத்தனேரி, அருள்தாஸ்புரம் பாத்திமா கல்லூரி, தீக்கதிர் ஆரப்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சென்று வீதி வீதியாக பொது மக்களிடம் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தல், கிராமங்கள் தோறும் கழிவறை இல்லாத வீடுகளுக்கு கழிவறை வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வசதி என்று நாட்டு மக்களுக்கு பல்வேறு சிறப்பு அம்சங்களை செய்து கொடுத்த மோடி அரசின் பத்தாண்டு கால சாதனை விளக்கி கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது வேட்பாளருக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
Tags:    

Similar News