ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
Update: 2023-11-19 03:28 GMT
சிறப்பு அலங்காரத்தில் அம்மன்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் ஐப்பசி மாத பண்டிகை தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் பல்வேறு கட்டளைதாரர்கள் அபிஷேக ஆராதனைகள் செய்து வருகின்றனர். அதன்படி ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பல்வேறு முக்கிய அபிஷேகங்கள் ஆன பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், தேன் பஞ்சாமிர்தம், இளநீர் பன்னீர் விபூதி என வாசனை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மன் சர்வ மஞ்சள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் 6வது நாள் விடையாற்றி கட்டளை நிகழ்ச்சியை அருந்ததியர் சமூகத்தார்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். தேங்காய் பழம் தட்டுக்களுடன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து பிரசாதங்களை பெற்றுச் சென்றனர். பண்டிகையை முன்னிட்டு கோவிலில் அம்மன் உற்சவருக்கு பிரித்திங்கரா தேவி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர், முன்னாள் கவுன்சிலர், நகர வளர்ச்சி மன்ற தலைவர் வி.பாலு, மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து இரவு சாமி திருவிதி உலாவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.