விளம்பர பேனர்கள் அகற்றம்
திருவண்ணாமலை மாவட்டம்,செங்கம் அருகே விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டது.
Update: 2024-05-19 14:50 GMT
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி விளம்பர டிஜிட்டல் பேனர்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்தது. விளம்பர பேனர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது.மழைக்காலங்களில் பொதுமக்களின் மேல் விழும் நிலை உள்ளது.இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தினர் இன்று பேனர்களை அகற்றினர்.