காரிமங்கலம் பகுதியில் சிறுத்தைகளை பிடிக்க கோரிக்கை

காரிமங்கலம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி அமைச்சரிடம் மாவட்ட செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2024-01-04 10:44 GMT

சிறுத்தை கடித்த ஆடுகள்

காரிமங்கலம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை அமைச்சரிடம் மாவட்ட செயலாளர் வலியுறுத்தல் பாலக்கோடு, ஜன.4: காரிமங்கலம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட செயலாளர், அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் ஜிட்டாண்டஅள்ளி பஞ்சாயத்து கிட்டம்பட்டி கிராமத்தில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது.இந்த சிறுத்தைகள் பொதுமக்களின் வளர்ப்பு கோழிகள், ஆடுகளை தாக்கி கொல்வதால், பொதுமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் பீதியடைந்துள்ளனர்.

கிராமத்தில் இரவு நேரத்தில் கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தைகள், பகலில் அருகில் உள்ள குகைக்குள் பதுங்கி விடுகிறது.இந்த நிலையில்,மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனியப்பன் தலைமையில், ஒன்றிய ஊர் பொதுமக்கள், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திடம், சிறுத்தைகளை வனத்துறையினர் விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி மனு வழங்கினர்.

மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், சிறுத்தைகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Tags:    

Similar News