குப்பம்கண்டிகை ஊராட்சி கட்டடம் அகற்ற கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டம்,கும்பகடிகை ஊராட்சியில் உள்ள பழுதடைந்த ஊராட்சி மன்றகட்டிடத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
Update: 2024-01-28 08:27 GMT
ஊராட்சி மன்ற கட்டிடம்
திருவாலங்காடு ஒன்றியம், குப்பம்கண்டிகை ஊராட்சியில், 4,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இக்கட்டடத்தை முறையாக ஊராட்சி நிர்வாகம் பராமரிக்காததால், தற்போது கட்டடம் விரிசல் அடைந்துள்ளது. மேலும், கூரை சேதமடைந்து உள்ளதால் மழையின் போது தண்ணீர் ஒழுகி, அலுவலகத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதுதவிர, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கதவுகள் மற்றும் ஆவணங்கள் வைக்கும் அறைகளும் சேதமடைந்ததால், சில ஆண்டுகளாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் பூட்டியே கிடக்கிறது. தற்போது, ஊராட்சி மன்ற அலுவலகம் தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் பழுதடைந்த கட்டடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.