தொடர் புழுதி காற்றால் அஞ்சுகிராம பொதுமக்கள் அவதி
அஞ்சுகிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வீசும் புழுதி காற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசுகிறது. குறிப்பாக அஞ்சுகிராமம் சுற்று வட்டார பகுதிகளில் வீசும் காற்று காரணமாக புழுதி வாரி தூற்றுவதால், சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொது மக்களும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் வீட்டை விட்டு வெளியே சென்றாலே பொதுமக்கள் புழுதியில் குளித்தது போன்ற நிலை உண்டாகி விடுகிறது.
அது மட்டுமின்றி ஓட்டல்கள், டீக்கடைகளில் உள்ள பதார்த்தங்களை மூடி வைக்கும் பாத்திரங்களும் கடைகளின் வழியே தொங்க விடப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் கடைகளுக்கு முன்னால் உள்ள போர்டுகள் காற்றில் பறந்து சென்று பொதுமக்கள் மீது விழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிடும் போது சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே செல்ல முடியவில்லை.