விருதுநகரில் சாலை மறியல்: 53பேர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 53 நபர்கள் மீது இரு பிரிவுகளின் கீழ் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2024-01-12 10:54 GMT
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 53 நபர்கள் மீது இரு பிரிவுகளின் கீழ் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு

விருதுநகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் இவர் நேற்று காலை விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, டி என் எஸ் டி சி விருதுநகர் மண்டல பொதுச் செயலாளர் வெள்ளத்துரை தலைமையில் சுமார் 52 நபர்கள் எந்தவித அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக ஒன்று கூடி ரோட்டை வழி முறைத்து போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையினை அரசு வழங்க வேண்டும் 15வது சம்பள ஊதிய ஒப்பந்தத்தை பேசி தீர்வு காண வேண்டும் காலி பணியிடங்களை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பேருந்து மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலந்து செல்ல மறுத்ததை எடுத்து மேற்கு காவல் நிலைய போலீசார் 53 நபர்களையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 53 பேர் மீதும் 143, 341 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News