கனமழையால் மரம் விழுந்து வீட்டின் மேற்கூரை சேதம் - எம்.எல்.ஏ நிதியுதவி

கன மழை பெய்ததில் வீட்டின் கூரை மீது மரம் விழுந்து சேதமடைந்த நிலையில் பெ.சு.தி.சரவணன், எம்எல்ஏ ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட நபருக்கு நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

Update: 2023-10-31 03:06 GMT

எம்.எல்.ஏ நிதியுதவி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென் பள்ளிப்பட்டு ஊராட்சியில் நேற்று பெய்த கனமழையில் மரத்தின் மீது இடி விழுந்து மரம் வீட்டின் மேல் கூரையில் மரம் சாய்ந்ததில் வீட்டின் கூரை சேதமான நிலையை பெ.சு.தி.சரவணன், எம்எல்ஏ ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட நபருக்கு ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட நபருக்கு உடனடியாக நிதி உதவி கிடைக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட வீட்டுக்கு வீடு வழங்க வேண்டும் என்பதற்காக வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் ஒன்றியக்குழுத்தலைவர் இடமும் உடனடியாக இவர்களுக்கு புதிய அரசு வழங்கும் வீடு வழங்க வேண்டும் அதற்கு உண்டான பணிகளை விரைந்து செய்யுங்கள் அத்துடன் வீட்டில் மீது விழுந்த மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றார். பின்னர் இவர்கள் தங்குவதற்கு உடனடியாகத் தனி ஒரு இடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் மேலும் அவர்களுக்கு தேவையான உணவு வசதி குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவரிடம் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட நபருக்கு தனது சொந்த நிதியில் நிதி உதவி வழங்கினார், இதனைத் தொடர்ந்து உடனடியாக அவர்களுக்கு அரசு வழங்கும் நிதி உதவியும் தமிழக அரசு வழங்கும் வீடும் உடனடியாக வழங்க வேண்டும் என்று பெ.சு. தி.சரவணன், எம்எல்ஏ அதிகாரிகளுக்கும் ஊராட்சி மன்ற தலைவருக்கு உத்தரவிட்டார், இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழுத்தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் அ.சிவக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் க.சுப்பிரமணியம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ், ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ், முன்னாள் கிளை செயலாளர் சண்முகம், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News