பாஜ., மகளிர் அணி சார்பில் ரன் அண்ட் வாக் நிகழ்ச்சி

திருப்பூரில் பாஜ., மகளிர் அணி சார்பில் ரன் அண்ட் வாக் நிகழ்ச்சி, மாநகராட்சி அலுவலகம் அருகே துவங்கி ராயபுரம் பூங்கா வரை நடந்தது.

Update: 2024-03-05 13:03 GMT
பாரத பிரதமர் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் வகையிலும் திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் நடைபயண பிரச்சாரம் மேற்கொண்டனர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே துவங்கிய ராயபுரம் ரவுண்டானா வரை மத்திய அரசின் சாதனைகளை தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி நடந்து சென்றனர்.
Tags:    

Similar News