திருப்பூரில் மாவட்ட நுகர்வோர் ஆணையம் தலைவரிடம் ரூபாய் 80 ஆயிரத்து 200 பறிமுதல்
மாவட்ட நுகர்வோர் ஆணையத் தலைவரிடம் ரூ. 80,200 தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
Update: 2024-04-01 06:12 GMT
மாவட்ட நுகர்வோர் ஆணையம் தலைவரிடம் ரூபாய் 80 ஆயிரத்து 200 பறிமுதல் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளருக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமார் ஜி.கிரியப்பனவர் மேற்பார்வையில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ளடங்கிய 114-திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட, திருப்பூர், காங்கயம் ரோடு, புதுப்பாளையம், தனியார் பள்ளி அருகே துணை மாநில வரி அலுவலர் திருமாள் செல்வன் தலைமையிலான நிலை கண்காணிப்பு குழு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது டி. சித்ரா தலைவர், (மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம். நீலகிரி) என்பவர் என்பவரின் காரில் ரொக்க பணம் 80 ஆயிரத்து 200 ரூபாய் முறையான ஆவணம் இல்லாமல் கொண்டு வந்தது. தெரிய வந்தது. தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு கொண்டு செல்லலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர்கள் பணத்தை பறிமுதல் செய்து உதவி ஆணையாளர் தேர்தல் கணக்கு (பொ)தங்கவேல்ராஜனிடம் ஒப்படைத்து கருவூலத்திற்கு அனுப்பப்பட்டது.